Sunday, November 15, 2015

எழுதியதில் சில .....


பெரிய புன்னகை ,
   ஒரு சிறு பார்வை
        சாய்ந்தேன் நான் .
                                               -- ஸ்ரீ
======================================================

ஒருவர் உடன் இருக்கும்போது அவர் அருமை தெரியாது
  என பலர் கூற கேட்டுள்ளேன் ...
உன் அருமை பெருமை உணர்ந்தேனா
  என தெரியவில்லை ...

ஆனால் நீ இன்றி இவ்வுலகே
   எனை சுற்றி இருந்தாலும்
       நான் தனிமையின் கையில்
           கண்கலங்கி நிற்பேன்  !!!!!
                                             -- ஸ்ரீ
=======================================================

மனம் எனும் குரங்கை
   உன் கண்களால் கட்டிவிட்டாயோ  ?
பல நாட்களாய்
  உன் நிழலிலேயே  நிற்கிறதே  !!!
                                            -- ஸ்ரீ
======================================================

உன் நினைவுகளால்
    மறந்தேன் நிகழ்காலத்தை ,
        ரசித்தேன் இறந்தகாலத்தை ,
           சிரித்தேன் வருங்கலாத்தை பார்த்து !!!
                                         -- ஸ்ரீ
======================================================



1 comment: