Thursday, February 10, 2011

க வரிசை - ஒரு செய்யுள்

ஒரு வரிசை  செய்யுள் .
என்னை மிகவும் கவர்ந்த்தது இதன் பொருள் , பல முறை நான் ஆமை - முயல் கதை கேட்டுள்ளேன் .
அதே கதை தூய தமிழில் எனை மெய் மறக்க செய்ததது .......
அந்த செய்யுள் உங்கள் பார்வைக்கு .....


  "காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
     கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்குக்குக்
     காக்கைக்குக் கைக்கைக்கா கா"

 எனவும்,

     காக்கைக்கு ஆகா கூகை; கூகைக்கு ஆகா காக்கை; கோக்குக் கூ காக்கைக்கும்,
 கைக்கைக்கும் கொக்கு ஒக்க, காக்கைக்கும் கைக்கைக்கும் ஆகா. உம்மைகள்
 தொக்குகின்றன. பகற்பொழுதில் காக்கைக்குக் கூகை தோற்கும், இரவில் கூகைக்குக்
 காக்கை தோற்கும். (ஆதலின் பொழுதறிந்து வெறறிக்குரிய செயலில் பொருந்துதல்
 வேண்டும்.) அரசனுக்கு நாடு காத்தற்கும் பகையை அழித்தற்கும், கொக்கு கூம்புமாறு
 கூம்பி, அது குத்துமாறு செயற்படும் காலமறிதல் வேண்டும். ஏலாப் பொழுதுகள் உலகு
 காத்தற்கும் பகை அழித்தற்கும் ஆகா.


     இது ககரவருக்கத்து மடக்கு


     

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த செய்யுளை எனக்கு அறிமுகபடுத்திய என் நண்பன் மாரிமுத்துவுக்கு என் நன்றிகள் .







No comments:

Post a Comment