Thursday, December 23, 2010

நீ எனக்கில்லை என்றதும் ....

நீ எனக்கில்லை என்றதும் ...
இருள் சூழக்கண்டேன் என் வாழ்வை !!!


உன் திருமண நாளில் ,
என் பிராத்தனை 
உன் வாழ்வு வளமாக அமையட்டும் என்று !!!
இந்த பிராத்தனை உன் முடிவை 
நான் மதித்து ஒப்புக்கொண்டதை நினைவுட்டியது !!!


உன் நினைவுகள் எனக்கு வருத்தம் சேர்க்கவில்லை ,
நீ இல்லை என்பதே என் வருத்தம் !!!


இந்த வருத்தம் சில நாட்களா அல்லது பல வருடங்களா 
நான் அறியேன் .


இறந்த காலத்தை மறந்து வாழ 
நண்பன் அழைத்தான் .
பாவம் , மறதி என்பது மனதுக்கில்லை 
என்பதை அறியான் போல !!!


" இந்த நிலை மாறும் " என்னும் பழமொழியை 
நானும் அறிவேன் .


என் நிலை என்னவென்று இன்னும் நான் அறியேன் .


--- ஸ்ரீ 






Enhanced by Zemanta