Sunday, October 25, 2009

Dad explaining his 8 Year old son about Community ..

எட்டு வயது சிறுவன் கார்த்தி தன்
தந்தை ரகுவிடம் வினாவினான் ,
அப்பா ஜாதி ,மதம் என்றால் என்ன ?

சற்றும் எதிர்பாராத கேள்வியை எதிர்கொண்ட ரகு ,கார்த்திக்கு புரியும் வகையில் எப்படி சொல்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் .

அங்கு ஓடி விளையாடும் சிறார்கள் அவரது பார்வையில் பட .. வானில் ஒரு வினாடி தோன்றி மறையும் மின்னல்போல் ஒரு வழி கிடைத்தது .

அவர் கார்த்திக்கை சில கேள்விகள் கேட்க முடிவு செய்தார் .

ரகு : கார்த்தி அங்கு சிறுவர்கள் என்ன செய்கிறார்கள் ?
கார்த்தி : அப்பா , அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் ?
ரகு : இருக்கு கார்த்தி ... நீ பதில் சொல் .
கார்த்தி : கண்டிப்பா பதில் சொல்றேன்ப்பா .
ரகு : சரி .அங்கே சில குழந்தைகள் விளையடிக்கொண்டிருகிறார்கள் பார் ..
கார்த்தி : ஆமாம் , ஓடி பிடித்து விளையாடுகிறார்கள் !!!
ரகு : இந்த விளையாட்டு உன்னக்கு தெரியுமா ?
கார்த்தி : ஹ்ம்ம் நல்ல தெரியும் .
ரகு : சரி . இப்ப சொல்லு இந்த விளையாட்டை எப்படி விளயடுவதுன்னு சொல்லு .
கார்த்தி : இது ரொம்ப எளிது . முதலில் விளையாடும் அனைவரும் யார் மற்ற எல்லோரையும் துரத்த வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் .பின் அந்த நபர் ஏதேனும் ஒருவரை பிடிக்க வேண்டும் ,அதன்பின் இது தொர்ந்து கொண்டே போகும்.
இப்ப சொலுங்க இதுக்கும் நான் கேட்தற்கும் என்ன சம்பந்தம் ?
ரகு : சொல்கிறேன்  கார்த்தி ... இப்ப நீ விளையாடனும்னு நினைத்தால் அவங்க உன்னை சேர்த்துக்குவாங்களா ?
கார்த்தி : அது எப்படி அப்பா ?
ரகு :  ஏன் ?
கார்த்தி : இல்ல அப்பா , அவங்க ஒரு குழுவா விளையாடுறாங்க , அதனால என்னை உடனே சேர்த்துக்க மாட்டாங்க :-(
ரகு : கார்த்தி இந்த மாதிரி ஒவ்வொரு குழுவா மனிதர்கள் பிரிந்து வாழ்ந்தப்ப வந்தது தான் இந்த மதம் . பின் அந்த குழு இன்னும் பிரிந்து சாதியானது .
கார்த்தி : சரி அப்பா .

Tuesday, September 29, 2009

God

I don't have the intelligence to describe about my CREATOR...


======= Expect the Unexpected ========